Thursday, March 31, 2011

நான் வேட்பாளர்? -- ஒரு டைரிக்குறிப்புகள்

கடந்த சில பதிவுகளில் நண்பர்களின் பின்னோட்டங்களுக்கு பதில் அளிக்காமல் விரைவாக ஓடி வந்து கொண்டிருந்தமைக்கு முக்கிய காரணம் இந்த பதிவில் மொத்தமாய் பதில் அளிக்கலாம் என்பதே ஆகும். மொத்த விசயங்களையும் ஒரே பதிவில் அடக்க வேண்டிய சூழ்நிலையினால் இந்த நீள்பதிவின் இம்சையை பொறுத்தருள்க.


இந்த கட்டுரையின் நோக்கம் என் சுயபுராணம் என்பதைவிட ஒரு வலிமைவாய்ந்த மீடியா ஒரு கட்சியின் கையில் இருந்தால் அதுவே ஆளுங்கட்சியாக இருக்கும்பட்சத்தில் என்ன மாறுதல்கள் உருவாகும்? ஆளுங்கட்சியை பகைத்துக் கொள்ளக்கூடாது என்ற கொள்கையுடைய தொழில் அதிபர்களின் போக்கு எப்படி ஒரு போராட்டத்தை திசை திருப்பிவிடும்? அதுவே பல்வேறு கூறுகளாக ஒற்றுமையற்று இருந்தால் வெகுஜன போராட்டமென்பது எத்தனை கேலிக்குறியதாக மாறிவிடும்? ஒரு பகுதியில் நடந்த உண்மையான விசயங்களுக்கும் வெகுஜன மக்களுக்கு ஊடகம் கொண்டு வந்து சேர்க்கும் விசயங்களும் எத்தனை மாறுபாடுகள் என்பதை உங்களுக்கு உணர்த்தக்கூடும்?

நடைபெறப்போகின்ற ( 2011 ஏப்ரல் 13 ) தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் ப்ளாஷ் நியூஸ் என்று சொல்லப்படும் முக்கியத்துவம் பெற்ற ஒரு செய்தி திருப்பூர் வடக்குத் தொகுதி. இப்போது திருப்பூர் நகரம் என்பது மாவட்டம் என்ற அந்தஸ்த்துக்கு வந்துள்ளது. தொகுதி சீரமைப்புக்கு பிறகு திருப்பூர் மாவட்டத்தில் இரண்டு தொகுதிகள் உருவானது.  ஒன்று தெற்கு. மற்றொன்று வடக்கு. இந்த வடக்கு தொகுதியில் தான் மா.கம்யூ ல் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து இப்போது உடன்பிறப்பாக மாறிய கோவிந்தசாமி திமுக வின் சார்பாக களமிறங்கியுள்ளார். தெற்கு தொகுதியில் திமுகவின் கூட்டாளியான காங்கிரஸ்க்கு (கட்டக்கடேசியாக) ஒதுக்கப் பட்டுள்ளது.

இங்கு வெளியே காட்டிக் கொள்ளமுடியாத திமுக எதிர்ப்பு பல விதங்களிலும் உண்டு. அதற்கு மேலாக வடக்கு தொகுதி வேட்பாளரான கோவிந்தசாமியின் தனிப்பட்ட 'நடவடிக்கை'களின் காரணமாக திருப்பூர் வடக்குத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளர்கள் 141 பேர்கள் களமிறங்கி மொத்த ஊடகத்தையும் திரும்பி பார்க்க வைத்தார்கள்.  யார்? ஏன்? எப்படி?

18.03.2011  காலைப்பொழுது

கடந்த இரண்டு மாதமாக வெற்றிகரமாக செயல்படுத்தியபடி வீட்டில் முதல் நபராக மூத்தவள் காலை செய்திதாளை சப்தம் போட்டு படித்துக் கொண்டிருந்தார்.  கால்பக்கம் அளவிற்கு 'வாக்காளர் எழுச்சிப் பேரவை' என்ற பெயரில் ஒரு விளம்பரம் வெளிவந்திருந்தது. வடக்கு கிழக்கு இரண்டு தொகுதிக்கும் தலா ஆயிரம் பேர்களை களமிறக்குவதாக அந்த அறிவிப்பு சொல்ல கேட்டுக் கொண்டிருந்த நான் மனதிற்குள் சிரித்துக் கொண்டு நகர்ந்து போய்விட்டேன்.

19.03.2011 நள்ளிரவு

நள்ளிரவில் நண்பரின் அலைபேசி அழைப்பு என்னை விழிக்க வைத்தது. குறிப்பிட்ட சாயப்பட்டறையில் உயர்பதவியில் இருப்பவர். இவருடன் எப்போதும் என்னுடன் தொடர்பிலிருக்கும் மற்ற நான்கு பேர்களுகளுக்குள் நடந்த உரையாடலின்படி என்னை அழைத்துப் பேசினார்.


'நடைபெறப்போகும் தேர்தலில் நீங்களும் பங்கெடுக்க வேண்டும்' என்றார்.  சப்தம் போட்டு சிரித்து விட்டு காரணத்தைக் கேட்டேன்.  முழு விபரங்களை கேட்டு விட்டு மனதில் சிரித்துக் கொண்டு அவரை கலாய்த்து விட்டு பேசிய விசயங்களை மறந்து விட்டேன்.  அவர் பேசியபோது கேட்ட வேட்புமனுவுக்குத் தேவைப்படும் ஆவணங்கள் என்னிடம் இருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டு சிரித்துக் கொண்டே விடைபெற்றார்.

20.03.2011 பகல்பொழுது

இரண்டு முறை நண்பரும் அவரைச் சார்ந்தவர்களும் என்னுடன் உரையாடிய போது இது குறித்து பரஸ்பரம் பேசிக் கொள்ளவில்லை. ஆனால் சாயப்பட்டறை சங்கங்களில் பிரிந்துள்ள அரசியல் நிலைபாடுகளையும், ஒவ்வொரு சங்கத்திலும் உள்ள பொறுப்பில் இருக்கும் தனிப்பட்ட மனிதர்களின் சுயநல குணாதிசியங்களையும் மட்டுமே பேசிக் கொண்டிருந்தோம். கடைசியாக வரப்போகும் சென்னை நீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசும் போது விரைவில் நாங்களும் ஊர்ப்பகம் செல்லக்கூடிய சூழ்நிலை வந்துவிடும் போலிருக்கு என்றார்.

என்னால் பதிலளிக்க முடியவில்லை. 

21.03.2011  அதிகாலை.

நண்பர் தூக்கத்தில் இருந்த எழுப்பி வாக்களர் அடையாள அட்டையை எடுத்துக் கொண்டு தாலூகா அலுவகத்திற்கு காலை 11 மணிக்கு வரச் சொன்னபோது வியர்த்துப் போனேன். விளையாட்டு வார்த்தைகள் விபரீதமாக போய்க் கொண்டிருப்பதை அப்போது தான் உணர ஆரம்பித்தேன்.  


பரபரப்பான வேலைகளுக்கிடையே நான் மறந்து விடுவேன் என்று மற்ற நண்பர்களும் அழைத்துச் சொன்ன போது தான் இது ஏற்கனவே 'திட்டமிட்ட பரிபூரண உணவு' என்பதை உணர்ந்து கொண்டேன்.வீட்டில் உள்ள நிதிமந்திரியிடம் எது குறித்தும் எப்போதும் எல்லாவிசயங்களையும் நான் சொல்லிவிடுவது வழக்கம்.  இதையும் சொன்ன போது 'உங்கள் பத்து வருட நட்பு கெட்ப் போகின்றது.  உங்க தனிப்பட்ட குணாதிசியமும் முழுமையாக அவருக்குத் தெரியாது' என்றார் சிரித்துக்கொண்டே.

21.03.2011 மதியம்

திருப்பூர் தாலூகா அலுவலகத்திற்கு அருகே வங்கிகளும் இருப்பதால் பல விதங்களில் எனக்கு வசதியாக இருந்தது.  நான் வீட்டில் இருந்து கிளம்பியது முதல் நண்பர்கள் ஒவ்வொருவரும் அலைபேசி மூலம் என்னை தொடர்ந்து கொண்டிருந்தனர். நான் திருப்பூர் தாலூகா அலுவலகத்தில் உள்ளே நுழைந்த போது முன்னால் இருந்த ஒரு கூரையின் கீழ் ஏராளமான நண்பர்கள் கூடியிருந்தனர்.  பக்கத்தில் ஒரு நீண்ட வரிசையும் நின்று கொண்டிருந்தது. என்னை அடையாளம் கண்டு கொண்ட ஒருவர் அவர் கையில் வைத்திருந்த விண்ணப்ப படிவத்தை என் கையில் கொடுத்து பூர்த்தி செய்து தாருங்கள் என்றார்.

சரிபார்த்துவிட்டு மீண்டும் என்னிடம் தந்தவர் 'அந்த வரிசையில் நின்று விண்ணப்ப படிவத்தை வாங்கி வாருங்கள்' என்று அனுப்பினார்.

என்னைப் போலவே முப்பத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்ப படிவத்தை நிரப்பிக் கொண்டிருந்தார்கள். என் பொறுமையின்மை கொண்டு செலுத்த முன்னேறிச் சென்றேன். உள்ளே என்ன நடக்கின்றது? என்று பார்க்கும் ஆவலை அடக்கிக் கொண்டு அநத நீண்ட வரண்டாவில் மேலேறி நின்றபோதுதான் வரிசையில் நின்று கொண்டிருந்த நபர்களை உற்று கவனிக்கத் தொடங்கினேன். 

அத்தனைபேர்களும் 24 வயதுக்குள் இருக்கும் இளைஞர்கள். பல்வேறு சாயப்பட்டறைகளில் பணிபுரிந்து கொண்டிருந்தவர்கள்.குறிப்பாக தென்மாவட்டத்தை சேர்த்தவர்கள். நான் போன வேலையை மறந்து விட்டு அந்த ஓங்குதாங்கான உடல்வாகை ரசித்துக் கொண்டு அந்த புஜபலசாலிகளை சிநேகம் பிடித்து பேசிக் கொண்டிருக்க அந்த கருத்த உடல் இளைஞர்களின் மனம் சுத்த வெள்ளையாக இருந்தது. வெறும் அம்பாக உள்ளே வந்து வரிசையில் நின்று கொண்டிருப்பதை உணர்ந்து கொண்டேன். அத்தனை பேர்களும் கடந்த அறுபது நாட்களாக ஒவ்வொரு சாயப்பட்டறைகளின் உள்ளே இருக்கும் உணவகங்களில் மூன்று வேளையும் சாப்பிட்டுக் கொண்டு கிரிக்கெட் மற்றும் கிராமத்து விளையாட்டுக்களை பயிற்சி எடுத்துக் கொண்டிருப்பவர்கள்.

பலசமயம் வீடியோ பார்த்து காலம் கடத்திக் கொண்டிருப்பவர்கள்.  

'ஏனப்பா ஊருக்கு போனாலாவது விவசாயத்தை பார்க்கலாமே'? என்றேன்.

'விவசாயம் பார்க்க நிலம் இருந்தாத்தானே போகமுடியும்?' என்று திருப்பிக் கேட்டு சிரித்தனர்.

பெரும்பாலானவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அத்தனை பேர்களுமே திருப்பூருக்குள் பல்வேறு துறைகளில் பணியாற்றிக் கொண்டிருப்பதை அவர்களின் பேச்சின் மூலம் புரிந்து கொண்டேன்.


என் முறை வந்த உள்ளே நுழைந்து பெற்ற வேட்பு மனு விண்ணப்ப படிவத்தை பெற்று கையெழுத்து போட்டு நிமிர்ந்த போது சுவற்றில் மாட்டியிருந்த காந்தி படம் என்னைப் பார்த்து சிரித்தது. அந்த விண்ணப்ப படிவத்தை முழுமையாகக் கூட படித்துப் பார்க்காமல் ஒப்படைக்க வேண்டிய நபர்களிடம் ஒப்படைத்து விட்டு நான் போக வேண்டிய வங்கிக்கு பறந்து விட்டேன்.

22.03.2011 காலை

மறுபடியும் என்னை துரத்திக் கொண்டிருந்தார்கள். ஏதோ விளையாட்டுக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்ற நினைப்புடன் நண்பர் வரவழைத்த அலுவலகத்திற்குள் நுழைந்த போது தான் இந்த திட்டத்தின் முழு வீர்யமும்  அப்போது தான் எனக்குப் புரிந்தது.  வங்கிக் கணக்கு தொடங்குவதற்கான முன்னேற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. அந்த குளிர்சாதன குறுகிய அறைக்குள் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.

கூட்டத்தின் வியர்வை நாற்றம் நாசியைத்தாக்க அவசரமாக எனக்கான விண்ணப்ப படிவத்தை நிரப்பி கொடுத்து விட்டு வெளியே வந்து போது நண்பரிடம் கேட்டேன்.

'இதற்கு பின்னால் யார் யார் இருக்கிறார்கள்?' என்றேன்.

'நாளை ஒரு அலுவலகத்திற்கு வருவீர்கள்? அப்போது புரியும்' என்றார்.

அவர் குழுவில் இருந்த மற்ற சாயப்பட்டறை உயர்பதவி மக்களும் சில முதலாளிகளும் என்னைப் பார்த்து 'சாயப்பட்டறை குறித்து வெறுமனே எழுதினால் மட்டும் போதாது?' என்றனர்?

குழப்பத்துடன் நகர்ந்து வீட்டுக்கு வந்த போது வீட்டில் உள்ள நிதி மந்திரி இது குறித்து செய்தி தாளில் உள்ள விளம்பரங்களையும் மற்ற தொகுப்பு விபரங்களையும் சேகரித்து வைத்திருந்தவர் என் கையில் கொடுத்தார்  அப்போது தான் அந்த வார்த்தையை முதன் முதலாக படித்தேன்.

'தொழில் பாதுகாப்பு குழு' என்ற பெயரை வைத்து ஒரு விளம்பரம் வந்திருந்தது.

23.03.2011 காலை

அடிப்படை வேலைகள் கெட்டுப் போய்விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு அவசரமாக தாராபுரம் சாலையில் உள்ள அந்த அலுவலகத்தை கண்டு பிடித்து அந்த மொட்டை மாடிக்கு வந்த போது ஒரு ஈ காக்காயை கூட காணவில்லை.  இந்து முண்ணனிக்கு இப்படி ஒரு காரியாலயம் இருப்பதையே அப்போது தான் உணர்ந்து கொண்டேன்.


நண்பர்கள் அவசரப்பட்டு போய்விடாதீர்கள். வந்து கொண்டேயிருக்கிறோம் என்றபடி என்னை அங்கேயே அமர வைத்தனர்.  காரியாலயத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தவர் என் விண்ணப்பபடிவத்தை நிரப்ப சொல்லிக் கொடுத்தபடி நிரப்பி முடித்த போது நண்பர்களான பஞ்ச பண்டவர்கள் வந்து இறங்கினர். அப்போது கூட எனக்கு முழுமையாக இது குறித்து நம்பிக்கை வரவில்லை.

காரணம் திருப்பூருக்குள் இருக்கும் அத்தனை சங்க நிகழ்வுகளையும், உள்ளேயிருக்கும் ஒவ்வொரு விசயங்களையும் தினந்தோறும் உள்வாங்கிக் கொண்டிருப்பதால் ஏதோவொரு கோமாளி வேஷம் போடுவது போல் இருந்தது. நண்பர்கள் வந்து சேர்ந்தனர். சற்று நேரத்தில் அவர்களின் விண்ணப்ப படிவங்களும் பூர்த்தி செய்யப்பட்டது.

'இதே அலுவலகத்திற்கு மீண்டும் இன்று இரவு வந்து விடுங்க' என்றனர்.

ஏன்? என்று கேட்ட போது உங்களுக்கு பல விசயங்கள் புரியும்! என்று நண்பர்கள் மையமாக புன்னகைத்தனர்.

23.03.2011 இரவு

அவசர வேலைகள் ஏதுமில்லாமல் அமைதியாக அந்த காரியலாயத்திற்குள் நுழைந்த போது முதல் முறையாக அரசியல் கட்சிகள் தங்கள் செயல்பாடுகளை எவ்விதம் செயல்படுத்துகிறார்கள் என்பதை அங்கு நடந்த பல நிகழ்வுகள் எனக்கு உணர்த்தியது. திடீரென்று உருவான மின்தடை பொருட்டாய் இல்லாமல் மினி ஜெனரேட்டர் கூடியிருந்த கூட்டத்தினரின் உரையாடல்களை நடத்திச் செல்ல உதவிபுரிந்து கொண்டிருந்தது.  ஓரு ஓரமாய் இருந்த டீ கேன் மூலம் தொடர்ந்து டீ கேட்பவர்களுக்கெல்லாம் விநியோகிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அப்போது தான் முதல் முறையாக இதற்கு பின்னால் உள்ள அத்தனை முகங்களையும், முதலாளிகளையும் பார்த்தேன்.


இது போன்றதொரு திட்டத்தை வரைவு செய்தவர்களும்,முன்னிலை படுத்தவேண்டும் என்று உருவாக்கியவர்கள் அருள்புரம் பொதுசுத்திகரிப்பு சங்கத்தைச் சேர்ந்தவர்கள். அந்த சங்கத்தைச் சார்ந்த சாயப்பட்டறை முதலாளிகள் மற்றும் அறிமுகமில்லாத பலரும் அங்கே திட்ட ஏற்பாடுகள் குறித்து பேசிக் கொண்டிருந்தனர்.

காரணம் மறுநாள் வேட்புமனுத்தாக்கல் செய்ய வேண்டிய நாள்.

ஒவ்வொரு வேட்பாளருக்கும் டெபாஸிட் தொகை கட்டத் தேவைப்படும் நிதி ஆதாரம் குறித்த உரையாடல் நடந்தேறிக் கொண்டிருந்தது. குழப்பங்களும். நம்பிக்கையின்மையுமாய் அந்த கூட்டம் என் பார்வையில் தெரிந்தது.

பொறுமையிழந்து உட்கார்ந்திருந்த போது என்னிடம் நண்பர்கள் 'நாளை காலை இங்கேயே வந்து.விடுங்க' என்றனர்.

'இவர்கள் ஓடத்தை கரையில் சேர்க்க மாட்டார்கள். தவறான பாதையில் போய்க் கொண்டிருக்கிறோம்' என்றேன்.

நண்பர்கள் மறுத்துப் பேசி என்னை சம்மதிக்க வைத்தனர்.

24.03.2011  காலை

என் வேட்புமனுவுக்கான விண்ணப்பபடிவத்தில் பரிந்துரை செய்ய வேண்டிய பத்துப் பேர்கள் என்ற பகுதிமட்டும் நிரப்பப்படாமல் இருந்தது. காலையில் அது குறித்து தெரிவிக்க அதற்கான வேலைகள் நடந்தது. அப்போது வந்த அலைபேசியில் வந்த அழைப்பை பேசுவதற்காக சம்மந்தப்பட்டவரிடம் என் விண்ணப்பபடிவத்தை ஒப்படைத்து விட்டு நகர்ந்து சென்று பேசிக் கொண்டிருந்தேன்.

ஆனால் அப்போது தான் பகவான் என் விண்ணப்ப படிவத்தில் வந்து அமர்ந்ததை கவனிக்காமல் பூர்த்தி செய்யப்பட்ட என் படிவத்தை எடுத்துக் கொண்டு அவர்களிடம் சொல்லிவிட்டு வெளியே வந்து விட்டேன். நேற்று இரவு நிதி ஆதாரம் குறித்து வாக்களித்த எந்த பெரிய தலைகளும் வரவில்லை. அத்தனை பேர்களும் இரவு நடந்த ஏதோவொன்றினால் பின்வாங்கி போயிருப்பதை உணர்ந்து கொண்டேன்.

நண்பர்கள் அவர்களுக்கு மற்ற வேலைகள் இருந்த காரணத்தால் அன்று பகல் பொழுதில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் என் வேட்பு மனுவை கொண்டு போய் சேர்த்தேன். கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளும் வெளியே இருந்தது. என் விண்ணப்பபடிவத்திற்கு கோட்டாட்சியர் அலுவலகத்தில் எண் கிடைத்த நேரம் பிற்பகல் 3.10. ஆனால் உள்ளே நுழைந்து முறைப்படி ஒப்படைத்த நேரம் மாலை 6.45.  ஆனால் இதற்கிடையே அலுவலக வாசலில் இருந்த மத்திய மாநில உளவுத்துறையினர், மீடியா மக்கள், தனிப்பட்ட ஆர்வலர்கள் என்று ஒவ்வொரு வேட்பாளர்களின் பின்புலம் முதல் ஜாதி வரைக்கும் கேட்டு குறித்து எவருக்கோ கடத்திக் கொண்டிருந்தனர்.  கவனிப்பதற்கு நிறைய விசயங்கள் இருந்தது.  கண்களுக்குள் பசி என்ற பூச்சி மட்டும் பறந்து கொண்டேயிருக்க காணும் கட்சிகள் எதுவும் மனதிற்குள் பதியாமலேயிருந்து.


கோட்டாட்சியர் அலுவலகம் முழுக்க ஏகப்பட்ட காவல்துறை கெடுபிடிகளில் வெளியே எங்கே செல்ல முடியாமல் வயிறு காய வெறுப்பும் சோகமும் எதிரே உள்ள சிறைச்சாலையை உற்றுப் பார்த்துக் கொண்டே வீட்டுக்கு வந்த போது மண்டைக்குள் கிர் என்ற சப்தம் கேட்ட போதிலும் மனதிற்குள் ஒரு பட்டாம்பூச்சி பறந்து கொண்டிருப்பதை உணர முடிந்தது. நேரங்கெட்டு சாப்பிட்ட போதிலும் ஏதோவொரு இனம் புரியாத சந்தோஷ உணர்வு. குறிப்பிட்ட நண்பர்களுக்கு இது குறித்து தெரிவித்தேன்.

25.06.2011 காலை.

இப்போது தான் இந்த 'தொழில் பாதுகாப்பு குழு'வுக்கென்று நியமிக்கப்பட்ட பெண்கள் என்னை தொலைபேசியில் தொடர்பு கொள்ளத் தொடங்கினர்.  ஏற்கனவே வேட்பாளர் விண்ணப்ப படிவத்துடன் கொடுக்கப்பட்ட பேங்க் ஸ்டேட்மெண்ட் மட்டும் போதாது அதற்கான பாஸ்புக் வேண்டும் என்ற கெடுபிடித்தனம் உருவாகியுள்ளதை தெரிவித்தனர். காரணம் ஒவ்வொரு நாளும் சுயேட்சைகளின் எண்ணிக்கை அதிகமாக ஒவ்வொரு சட்டதிட்டமும் மாறிக் கொண்டிருப்பதை என்னால் உணர முடிந்தது.  வங்கிக்குச் சென்றால் பாஸ்புக் கைவசமில்லை என்ற பதிலை கேட்ட போதிலும் பொறுமையாக அங்குள்ள அதிகாரிக்கு புரியவைத்து, அவர்களிடம் இருந்த இரண்டு பாஸ்புக்கில் ஒன்றை பெற்று என் புகைப்படத்தை ஓட்டி ஒப்படைத்துவிட்டு வெளியே வந்த போது அடுத்த அழைப்பு அதே பெண்ணிடமிருந்து வந்தது.

'சொத்து குறித்த கிராம நிர்வாக அதிகாரி சான்றிதழ்களையும் கொண்டு போய்  கொடுத்து விடுங்க' என்றார்.

கிராம நிர்வாக அதிகாரியின் அலுவலகத்திற்கு முதன் முறையாக நான் சென்றபோது அங்கே எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.. என்னுடன் பத்து வருடங்களுக்கு முன் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்தவர் கிராம நிர்வாக அதிகாரியாக இருக்க பிரச்சனை முடிவுக்கு வந்தது. அந்த சான்றிதழ்களையும் கொண்டு போய் ஒப்படைத்துவிட்டு வீட்டில் வந்து நிதி மந்திரியும் சொன்ன போது சப்தம் போட்டு சிரித்தார்.


'நாளைக்கு தான் பஞ்சாயத்து ஆரம்பிக்கப் போகின்றது' என்றார்.

ஏன்? என்று கேட்ட போது திமுகவின் முன்னாள் அமைச்சர் சுப்புலெட்சுமி ஜெகதீசன், அதிமுக பொன்னையன் பேசிக் கொண்டிருப்பதையும் பத்திரிக்கையில் வந்த செய்திகளை சுட்டிக் காட்டி பேசினார். இதற்கிடையே சாய்ப்பட்டறை சங்கத்தின் பெயர் மாற்றம், பிரிந்த சாயப்பட்டறைகளின் லாவணிக் கச்சேரி, எதிர் அறிக்கை என்று ஒவ்வொரு பத்திரிக்கையும் ஒவ்வொரு விதமாக எடுத்துக் கூறிக் கொண்டிருந்தது.

இந்து முண்ணனி காரியாலயத்தில் நான் இருந்த நேரத்தில் இந்த தொழில் பாதுகாப்பு குழுவுக்கு ஒருங்கிருணைப்பாளராக இருந்தவருக்கும், அருகே இருந்த மற்றொரு முக்கிய பிரமுகருக்கும் வந்த அலைபேசி உரையாடல்களையும், மிரட்டல்களையும்,வாக்குவாதங்களையும்  கெஞ்சல்களையும், அழுத்தங்களையும் கவனித்தவனுக்கு இந்த செய்திகள் பெரிதாக தெரியவில்லை.  இந்த இடத்தில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் இந்து முண்ணணி அமைப்பு எந்த தேர்தலிலும் போட்டியிடுவதில்லை. ஆனால் இங்கே நடக்கும் அத்தனை வெகுஜன போராட்டங்களுக்கும் முன்னிலையில் ஆதரவு கொடுப்பவர்கள் இவர்களே.  ஆனால் இவர்களின் செயல்பாடுகளை முதல் வரிசையில் நின்று எதிர்ப்பவர்களே சாயப்பட்டறை முதலாளிகள் தான். காரணம் பல விதமான பயங்கள்.

26.03.2011

ஒவ்வொரு ஊடகமும் போட்டி போட்டுக் கொண்டு அலறத் தொடங்கியது. காரணம் திங்கள் கிழமை (28) முதல் போட்டியிடும் அணைத்து சுயேட்சைகளும் வாபஸ் வாங்குகிறார்கள் என்ற செய்திகளை படித்து / கேட்டுக் கொண்டே வந்த போதிலும் அது போன்று எந்த முடிவும் இங்கே இல்லாமல் தான் இருந்தது. மனுத்தாக்கல் செய்த ஒவ்வொரு பாதிக்கப்பட்டவர்களும் பரஸ்பரம் விசாரிக்கத் தொடங்கினர். மேல்மட்ட நிகழ்வுகளையும், உரையாடல்களையும் உணர்ந்து கொள்ள முடியாமல் தவித்தனர். நான் உண்மைகளுக்கும் ஊடகங்களுக்கும் உண்டான தர்மத்தை அப்போது தான் முழுமையாக உணர்ந்து கொண்டேன்.

வேட்பு மனுக்கான டெபாஸிட் தொகையை ஏற்கனவே பேசியபடி எந்த சங்கமும் ஏற்க முன்வராத காரணத்தால் தெரிந்தவர், அறிந்தவர், பழகியவர், நட்பு என்கிற ரீதியில் அவரவர்களும் பகிரிந்து கொண்டு கட்டத் தொடங்கினர். பல சாயப்பட்டறை முதலாளிகளே ஏற்றுக் கொண்டுவிட வேட்பு மனுத்தாக்கலின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த இடத்தில் மற்றொரு ஆச்சரியம் இந்த குழுவுக்கு வழிகாட்டியாக இருக்கும் தணிக்கையாளர் முதல் வழ்க்குரைஞர் வரைக்கும் களமிறக்க தயராய் இருந்தனர்.

வாபஸ் குறித்து எந்த முயற்சிகள் நடக்காத போதும் இது குறித்து வந்து கொண்டிருந்த செய்திகளை கவனித்துக் கொண்டே வந்த எனக்கு கலைஞர் தொலைக்காட்சி இந்த நிகழ்வுக்கு காட்டிய அக்கறையும், சன் தொலைக்காட்சி பிட்டு போல சொல்லிக் கொண்டு வர ஏதோவொன்று நடக்கப் போகின்றது என்பதை உணர்ந்து கொண்டு அடுத்த செய்திக்காக காத்திருந்தேன்.

காரணம் இரவு நடந்த மேல்மட்ட உரையாடல்கள் அழுத்தங்கள் ஒவ்வொன்றாக மறுநாள் வெளிவரத் தொடங்கியது. .

27.03.2011 

நண்பர்கள் ஒவ்வொருவராக அழைத்து வாபஸ் வாங்குவது குறித்து பேசத் தொடங்கினர்.  காரணம் நாளை (28) மனு ஆய்வு தினம்.

நிராகரிப்பட்டவை, சந்தேகம் உள்ளவை, வாபஸ் வாங்க விரும்புவர்கள் போன்ற அத்தனை பஞ்சாயத்துகளும் நடக்கும்.

எனக்கு கொடுக்கப்பட்ட தேர்தல் ஆணைய தாளில் ஒரு பக்கத்தில் இதற்கான அழைப்பு இருந்தது.  எவராவது என்னிடம் பேசத் தொடங்க வார்த்தைகள் வித்யாசமாக வந்து விடுமோ என்று யோசித்துக் கொண்டு அந்த கூட்டத்திற்கு போகாமல் இருந்து விடலாம். ஆனால் எக்காரணம் கொண்டும் வாபஸ் வாங்கிவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். அலைபேசியில் அழைத்த நண்பர்கள் குழுவிடம் மென்மையாக இதை எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தே வீட்டில் நிதி மந்திரி சப்தம் போட்டு சிரித்துக் கொண்டிருந்தார்.

28.03.2011  

காலை ஒன்பது மணிக்கு முதல் அழைப்பு வந்தது. 

'தொழில் பாதுகாப்பு குழுவிலிருந்து பேசுகின்றேன். உங்கள் வாக்காளர் அடையாள அட்டையை எடுத்துக் கொண்டு ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு வந்து விடுங்க' என்றார்.

என்ன காரணம் என்று கேட்ட போது அந்த பெண்ணின் குரல் முழுமையற்று கிளிப்பிள்ளை போல திரும்ப திரும்ப ஒரே வாசகத்தை பேச `ஃபோனை வைத்து விடும்மா என்றேன்.

அடுத்த பத்து நிமிடத்தில் அதே எண்ணில் இருந்து மற்றொரு பெண் பேசிய போது பெண்களிடம் கெட்ட வார்த்தைகள் பேசுவது எனக்குப் பிடிக்காது.  வைத்து விடும்மா என்றேன்.

தகவல்கள் மேலே செல்ல ஒவ்வொருவராக அழைக்கத் தொடங்கினர். நண்பர்கள் குழுவிற்கு ஒவ்வொரு அழுத்தமும் வந்து சேர அலைபேசியின் உயிரைப் போக்கி விட்டு அமைதியாக அன்றைய பகல் தூக்கத்தை நீண்ட நாளைக்குப் பிறகு ரசித்து தூங்கிப் போனேன். இடையில் எழுந்து அலைபேசிக்கு உயிருட்டிய போது வந்து விழுந்த கால் அலர்ட் என்று குறுஞ்செய்திகள் வந்து விழுந்து கொண்டேயிருந்தது. அத்தனையும் புதிய எண்கள்.  ஐம்பதுக்கும் குறையாமல் வந்து விழுந்து கொண்டேயிருந்தது. நண்பர்களின் எண்களும் இருக்க மீண்டும் அலைபேசியின் உயிரைப் போகிக்கி விட்டு அமைதி காத்தேன்.

29.03.2011

மீண்டும் காலை ஒன்பது மணிக்கு அலைபேசியை உயிரூட்டிய போது மறுபடியும் பொல பொலவென்று குறுஞ்செய்திகளில் அலைத்த எண்களின் விபரங்கள் வந்து விழுந்து கொண்டேயிருந்தது.

மனம் கேட்காமல் நண்பரை அழைத்த போது கோபப்படாமல் சப்தம் போட்டு சிரிக்கத் தொடங்கினர்.  

'நம்முடைய ஐந்து பேரில் உங்கள் விண்ணப்ப படிவம் மட்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. உங்களைப் போலவே எழுபது பேர்களின் விண்ணப்ப  படிவங்களையும் நிராகரிப்பு என்ற நிலையில் கொண்டு வந்து விட்டார்கள். எங்கள் முதலாளி சொன்னபடி நாங்கள் நான்கு பேர்களும் வாபஸ் வாங்கி விட்டோம்.  நீங்க தான் விழுந்து விழுந்து எல்லா ஆவணங்களையும் சரிபார்த்து ரொம்ப அக்கறையாக கொண்டு போய்ச் சேர்த்தீங்க.  நாங்களாவது பேங்க ஸ்டேமெண்ட் மட்டும் தான் வைத்தோம்.  நீங்க மெனக்கெட்டு பாஸ்புக் கூட வைத்தீங்க. யாரோ ரொப்பிக் கொடுத்தாங்க.  கையெழுத்து மட்டும் தான் நாங்க போட்டோம்'என்று அவர் சிரித்த சிரிப்பை ஸ்பீக்கரின் வழியாக கேட்டுக் கொண்டிருந்தேன்.

இப்போது என் பக்கத்தில் வீட்டு நிதி மந்திரியும் இந்த உரையாடலை கேட்டுக் கொண்டிருந்தார்.   அவர் சிரித்து முடித்ததும் இவர் சிரிக்கத் தொடங்கினர்.

29.03.2011

அவசரமில்லாது மாலையில் கோட்டாட்சியர் அலுவகத்தில் நுழைந்த போது ஒரு ஈ காக்காய் கூட இல்லை.  அப்போது அங்கு அறிமுகமான ஒரு உயர் அதிகாரி தொடர்பு கிடைத்தது. பழகிய சில நிமிடங்களில் நண்பராக பேசத் தொடங்கினார். அந்த அறையில் வேறு யாருமில்லை. தனிப்பட்ட முறையில் முக்கால் மணி நேரம் என்னுடன் பேசிய போது தான் பல விசயங்கள் புரிந்தது.

இங்கும் அந்த அதிகாரியின் இருக்கைக்கு பின்புறம் அதே காந்தி தாத்தா புகைப்படம். வேறுபக்கம் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்.

காந்தி தாத்தா சிரிக்கும் சிரிப்பின் அர்த்தம் இப்போது எனக்கு புரிந்தது.

தேர்தல் ஆணையத்திற்கு நன்றி.

பாதிக்கு மேற்பட்டவர்கள் எவரும் வாபஸ் வாங்கத் தயாராக இல்லை என்பதே உண்மை. அவர்களை அழைத்து சமாதானப்படுத்த அலைபேசி வழியாக அலைத்தவர்களின் காதுகளில் ரத்தம் வழியும் அளவிற்கு பேசிய செந்தமிழ் வார்த்தைகளும், நிறைய உண்டு. தொழில் பாதுகாப்பு குழு உருவாக்கிய வேகம் கலையத் தொடங்க ஒவ்வொருவருக்குள்ளும் இருந்த ஆதங்கம் வெளியேறத் தொடங்கியது. திசைதெரியாத பறவை போல மாறத் தொடங்கினர். பத்திரிக்கைகளும் போட்டி போட்டுக் கொண்டு வாபஸ் வாங்குபவர்களின் புகைப்படம் என்று போட்டுத் தாக்க படிப்படியாக வேறு வழி தெரியாமல் ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு வரத் தொடங்கினர்.

இதற்கு பின்னால் உள்ள எதிர்மறை நியாயங்களை சமயம் கிடைக்கும் போது எழுதுகின்றேன்.
.

விதைகள் உறங்குவதில்லை. முளைப்பதற்கான காலங்கள் மட்டும் வேறுபடும்.

நன்றி தமிழ்மீடியா, முன்னெடுக்க தயாராகயிருந்த வலையுலக தோழமை களுக்கும், மற்றும் சின்னம் வந்துவுடன் சொல்லுங்க. மற்ற திட்டமிடுதல்களை பேசுவோம் என்ற உள்ளூர் தோழனுக்கும்.

40 comments:

Chitra said...

இந்த கட்டுரையின் நோக்கம் என் சுயபுராணம் என்பதைவிட ஒரு வலிமைவாய்ந்த மீடியா ஒரு கட்சியின் கையில் இருந்தால் அதுவே ஆளுங்கட்சியாக இருக்கும்பட்சத்தில் என்ன மாறுதல்கள் உருவாகும்? ஆளுங்கட்சியை பகைத்துக் கொள்ளக்கூடாது என்ற கொள்கையுடைய தொழில் அதிபர்களின் போக்கு எப்படி ஒரு போராட்டத்தை திசை திருப்பிவிடும்? அதுவே பல்வேறு கூறுகளாக ஒற்றுமையற்று இருந்தால் வெகுஜன போராட்டமென்பது எத்தனை கேலிக்குறியதாக மாறிவிடும்? ஒரு பகுதியில் நடந்த உண்மையான விசயங்களுக்கும் வெகுஜன மக்களுக்கு ஊடகம் கொண்டு வந்து சேர்க்கும் விசயங்களும் எத்தனை மாறுபாடுகள் என்பதை உங்களுக்கு உணர்த்தக்கூடும்?


.....quite an interesting topic. இன்னும் வாசித்து கொண்டு இருக்கிறேன். இந்த அருமையான பதிவை இரண்டு பாகமாக போட்டு இருந்தால், இன்னும் பலர் நீள பதிவு என்று ஒதுக்காமல் வாசிப்பார்களே. இந்த பதிவின் சாராம்சம், பலரை சென்றடைய வேண்டும்.

ஜோதிஜி said...

வேறு வழியில்லை சித்ரா. சிறிது இடைவெளி விட வேண்டிய நேரம். நேரம் இருக்கும் போது விரும்புவர்கள் வாசிக்கட்டும்.

தமிழ்மலர் said...

நன்று. தேர்தல் கள நாடகங்களை யாராவது அனுபவித்து எழுதவேண்டும் என்ற எனது நீண்ட நாள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளீர்கள்.

தேர்தல் ஆணையத்தின் குளறுபடிகள், அதிகாரிகளின் தில்லமுல்லுகள் இன்னும் நிறைய இருக்கிறது. சுயேட்சைகள் என்ற போர்வையில் ஒவ்வொரு தேர்தலிலும் நடக்கும் தில்லுமுல்லுகளுக்கு அளவே இல்லை. பூத் முகவர்கள் ஒத்துழைப்புடன் கடந்த தேர்தலில் ஆயிரக்கணக்கான 49(0) மாயமானது. நேரில் பார்த்து எழுதிய எனது செய்தியை பத்திரிக்கை நிர்வாகம் வெளியிடவில்லை. இதே போல பல தில்லுமுல்லுகள் நடக்கிறது.

இந்திய தேர்தல் என்பது ஒரு கேளிகூத்து. பார்த்து சிரித்து தலையில் அடித்துக்கொண்டு அடுத்த வேலையை பார்க்க வேண்டும். அவ்வளவே.

தேர்தல் முடிவு வெளியீடு வரை உங்கள் அனுபவத்தை எதிர்பார்த்தேன். பரவாயில்லை, இன்னும் 6 மாதத்தில் ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் இடைத்தேர்தல் காத்திருக்கிறது.

வானம் said...

தொழில் பாதுகாப்பு குழு இந்து முன்னணியோடு தொடர்புடையது என்பதாக தெரிந்துகொண்டவுடன் எனக்கு ஏற்பட்ட சந்தேகம் ‘ ஜோதிஜீயின் எழுத்துக்கும் செயலுக்குமான இடைவெளி மிக அதிகமாக இருக்கிறதே’ என்றுதான். இப்போது ஓரளவு புரிகிறது.

துளசி கோபால் said...

நடந்தவைகளை அறிந்து கொண்டேன். எல்லாமே எனக்குப் புதுசு.

திரைக்குப்பின் நடப்பதை, நடந்ததை 'காந்தி' பார்த்துருப்பார்!!!!!

ஜோதிஜி said...

இன்னும் 6 மாதத்தில் ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் இடைத்தேர்தல் காத்திருக்கிறது

நடந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளும் இப்படித்தான் இருக்கிறது. பார்க்கலாம்.

ஜோதிஜீயின் எழுத்துக்கும் செயலுக்குமான இடைவெளி மிக அதிகமாக இருக்கிறதே’ என்றுதான்

இல்லை நண்பா. இந்த தொழில் பாதுகாப்பு குழு, மற்றும் இந்து முண்ணனி குறித்து, அவர்கள் கடைசியாக நடத்திய பொதுமேடை குறித்து பல விசயங்கள் எழுத உண்டு. வளர்ந்து கொண்டே போகும். நிச்சயம் எழுதுவேன். அப்போது உங்களுக்கு பல புரிதல்கள் கிடைக்கும். நன்றி.

சென்ஷி said...

விரிவாக எழுத நினைத்து, நேரமின்மையால் வாழ்த்துகளுடன் நகர்கிறேன். வாழ்த்துகள் நண்பா..

Thekkikattan|தெகா said...

உங்களைப் போலவே எழுபது பேர்களின் விண்ணப்ப படிவங்களையும் நிராகரிப்பு என்ற நிலையில் கொண்டு வந்து விட்டார்கள். //

அடக் கொடுமையே! என்னய்யா இப்படி பொசுக்கின்னு ஊத்தி மூடி ஒதுக்கி விட்டுட்டாய்ங்க... நான் இன்னும் என்னன்னவோ எல்லாம் எதிர்பார்த்தேனே! சத்தமே இல்லாம ஒதுக்கிவிடுறளவிற்கு வளர்ந்திட்டோமா? Anything possible அப்படிங்கிறதுக்கு இதெல்லாம் சாட்சி... அடுத்த ஹெய்ட்டி நாமதான் போல ;-)

ஜோதிஜி said...

நன்றி சென்ஷி.

இல்லை தெகா. இரண்டாவது பாகம் எழுதும் அளவிற்கு இன்னும் நிறைய விசயங்கள் உண்டு.

ஜோதிஜி said...

வாங்க டீச்சர்.

உண்மையிலேயே காந்தி படத்தை பார்த்த போது , பார்க்கும் போது என் மனதில் ஒரு குறுகுறுப்பு உருவானது உண்மை.

எல் கே said...

பல விஷயங்கள் புலனாகி உள்ளன. இந்துமுன்னணி பற்றிய உங்களது பதிவுக்கு காத்திருக்கிறேன்

Unknown said...

இது முதலாளிகளின் உலகம் அண்ணே.. எப்போதும் வல்லான் வகுத்ததே வாய்க்கால்..

Unknown said...

பகிர்வுக்கு நன்றி நண்பா

http://thavaru.blogspot.com/ said...

Success next exit அன்பின் ஜோதிஜி. விதைகள் உறங்குவதில்லை. முளைப்பதற்கான காலங்கள் மட்டும் வேறுபடும்.

நான் சொல்லவில்லை அன்பின் ....அட சத்தியமா நீங்க தான்.

ஜோதிஜி said...

எல்கே

இப்போதுள்ள குஜராத் முதல் அமைச்சர் நரேந்திர மோடி குறித்து அங்கு நடக்கும் ஆச்சரியங்களைப் பற்றி எழுதும் போது நிச்சயம் எழுதுகின்றேன்.

செந்தில் நீங்க சொல்வது முற்றிலும் உண்மை.

வருக விக்கி உலகம்.

தவறு

போட்டு தாக்கி வாங்கி தாக்கி.... ம்ம்ம்...

CS. Mohan Kumar said...

மிக வித்தியாசமானதொரு அனுபவத்தை சந்தித்துள்ளீர்கள். ப்ளாக் இருப்பதால் அனைவரிடமும் உங்களால் அதனை பகிர முடிந்திருக்கிறது

Unknown said...

ம்ம்ம் கடைசியில் உங்களது மனுவையும் தள்ளுபடி செய்துவிட்டார்களா, சில பேர் நினைத்தால் யாரையும் எதுவும் செய்யவிட மாட்டேன் என்கிறார்கள், இப்பொழுதுதான் தெரிகிறது அதிகாரத்தின் வலிமை,சரி சார் தள்ளுபடி செய்யும் மனுக்களுக்கு எதனால் தள்ளுபடி செய்யப்படுகிறது என காரணம் கூறுவார்களா? உங்களுக்கு என்ன காரணம் கூறினார்கள் சார்

எண்ணங்கள் 13189034291840215795 said...

எல்லாம் நன்மைக்கே என எடுத்துக்கொள்ளுங்கள்..

நேரில் அனுபவித்துள்ளீர்கள் தில்லு முல்லுவை..

அரசியல் எளிதான விளையாட்டல்லவே.. சாதிக் மரணம் போல எத்தனை?

இன்னும் காலம் இருக்கு,..

வெல்வீர்கள்.

ஜோதிஜி said...

நீங்கள் சொல்வது உண்மை தான் மோகன் குமார். இன்னும் 20 வருடங்கள் (இருந்தால்) கழித்துக்கூட நாம் கடந்து வந்த பாதையை படித்துப் பார்கக இந்த கூகுளார் உதவுகிறார்.

சுரேஷ் நீங்கள் விரும்புவதை எழுதினால் அதுவும் ஒரு பெரிய நகைச்சுவை இடுகையாக வந்து விடும். அந்த அளவிற்கு விசயங்கள் உண்டு.

அரசியல் எளிதான விளையட்டல்லவே. உண்மையான நான் உணர்ந்த அனுவம் தத்துவம் சாந்தி இது. நன்றிங்க.

குறும்பன் said...

வணிகர்கள் (முதலாளிகள்) அல்லாமல் விவசாயிகள் 1000 பேரை நிறுத்த முடிவு செய்திருந்தால் அது கண்டிப்பாக நடந்திருக்கும்.

ஜோதிஜி said...

குறும்பன் எனக்கு கிடைத்த அனுபவம் என்ன தெரியுமா?

தொழில் அதிபர்களுக்கு போராடவும் தெரியாது. போராட்டத்தையும் வழி நடத்தவும் தெரியாது. எதற்கும் ஆதரவளிக்கவும் முடியாது. மொத்தத்தில் தங்களை காப்பாற்றிக் கொள்ளவும் அடிப்படை அறிவும் கிடையாது.

ஊரான் said...

இந்திய ஜனநாயகம் குறித்து மிகவும் தாமதமாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். இன்னும் நிறையவே இருக்கிறது புரிந்து கொள்ள. எனினும் உங்களின் முயற்சி பலரின் விழிப்புக்கு வழிவகுக்குமேயானால் அதுவே மகிழ்ச்சிதானே. வாழ்த்துக்கள்!

அ.சந்தர் சிங். said...

""""விதைகள் உறங்குவதில்லை. முளைப்பதற்கான காலங்கள் மட்டும் வேறுபடும்""".
சத்தியமான வார்த்தை இது.
"காலம் ஒரு நாள் மாறும்.
நம் கவலைகள் யாவும் தீரும்."

கல்வெட்டு said...

.

ஜோதிஜி,
இரண்டு விசயங்களைப் பதிவு செய்ய விரும்புகிறேன்

1.
நீங்களாக விரும்பி தேர்தலில் போட்டியிட நினைக்கவில்லை. விஜயகாந்தை பாமக இழுத்ததுபோல உங்களை ஏதோ ஒரு கூட்டம் இழுத்துவிட்டுள்ளது.

அப்படி ஒரு கூட்டம் சொல்வதைக் கேட்கும்முன் அந்தக் கூட்டத்தின் நம்பகத்தன்மை, கொள்கை, என்ன காரணங்களால் நம்மை அணுகுகிறார்கள், ஏன் இந்த தேர்தலில் மட்டும், இவர்களின் தொலைநோக்கு கொள்கை என்ன ...என்று பார்த்தே நீங்கள் சம்மதித்து இருக்க வேண்டும்.

இல்லை என்றால் தங்கபாலுவையும் இன்னபிற தலைகளையும் தலைவராக ஏற்றுக்கொண்டுள்ள கட்சியில் " நானும் ஒரு தொண்டன் எனது தலைவன் தங்கபாலு" என்று சொல்லிக் கொள்ளும் பிரியாணிக்குஞ்சுகளுக்கும் உங்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. :-((((

எல்லாவற்றுக்கும் ஒரு புறத்தூண்டுதல் வேண்டும் ஒத்துக் கொள்கிறேன்.

நீங்கள் தூண்டப்பட்டது யோக்கியவான்களால் அல்ல.


2.
திருப்பூரில் தொழில் நடத்தும் தொழில் முதலைகள் அரசு சொல்லுதோ இல்லையோ மனட்சாட்சிப்படி சுற்றுப்புறத்தைக் காக்க என்ன செய்யவேண்டுமோ அதைச் செய்திருக்க வேண்டும்.

சாயப்பட்டறை விசயத்தில் அரசு,நீதி மன்றம் சொல்வதற்கு முன்னரே அரசே மெச்சும் விதம் தொழில் நட்த்தி இருக்க வேண்டும்.

இன்னும் நீதி மன்றம் அவர்கள் வீட்டுப் பூசை அறையில் அவர்கள் ஒன்னுக்குப் போகக்கூடாது என்று சொல்லவில்லை. நீதி மன்றம் வந்து சொல்லும் வரையில் அவர்கள் தங்கள் வீட்டு பூசை அறையில் ஒன்னுக்குப் போவார்களா? லஞ்சம் கொடுக்காமல் தொழில் நடத்துகிறார்களா?

ஏதும் இல்லை.
அதாவது அவர்கள் யோக்கியவான்கள் இல்லை.காற்றுள்ளபோது தூற்றிக்கொள்ளும் சராசரி வியாபாரிகள். அம்பானி கோடியில் அடித்தால் இவர்கள் இலட்சத்தில் அடிப்பவர்கள்.

ஒரு மனிதன் தன் வயிற்றுப் பிழைப்பிற்காக இது போன்ற முதலாளிகளிடம் வேலை செய்யலாம். (நானும் அப்படியே...பண்ணையார் கற்பழிப்பு செய்தால் அதற்கு வண்டியோட்டி பொறுப்பேற்க வேண்டியது இல்லை) ஆனால் அவர்களின் போதைக்கு ஊறுகாய் ஆகக்கூடாது.

** நீங்கள் ஜட்டி போடுவீர்களா? என்று நீங்கள் என்னைக் கேட்கலாம்.

ஆம் போடுகிறேன்.
ஊழல் தலைவர்கள்தான் என்னை ஆளுகிறார்கள் என்பதற்காக அவர்களின் செயல்களை நான் ஏற்றுக்கொண்டதாக அர்த்தம் இல்லை. சார்ந்துவாழும் உலகில் இதுபோல் சாக்கைடைகளுடனும் புரளவேண்டும் என்பது இயல்பு.

நான் யோக்கியன் இல்லை. பிழைப்புவாதத்திற்காக பல சமரசங்களைக் கொண்ட கேவலமானவனே. அதற்காக அந்த சமரசங்களை நல்லது என்று நினைக்கவில்லை.

அமெரிக்க வால்மார்ட், சீனாவில் அதன் உற்பத்திக் கூடங்களில் தொழிலார்களை கொத்தடிமைபோல் நடத்துகிற‌து என்று சொல்லி வால்மார்ட்டை புறக்கணிப்பவர்கள் உண்டு. அதுபோல சாயப்பட்டறைக்காக திருப்பூரைப் புறக்கணிக்கலாம். குழந்தை தொழிலார்களுக்காக சிவகாசியைப் புறக்கணிக்கலாம்,தீண்டாமைக்காக கோவிலைப் புறக்கணிக்கலாம்,இலஞ்சத்திற்காக அரசைப்புறக்கணிக்கலாம்...சுடுகாட்டில் கட்டையைப்போடும்போதுதான் இது எல்லாம் சாத்தியம்..ஏன் என்றால் சபிக்கப்பட்ட நாடும் சுயநல மக்களும் உள்ள இடம் இது...

.

ஜோதிஜி said...

ஊரான் தனிப்பட்ட முறையில் என் நன்றி. கடந்த மூன்று பதிவுகளை இதற்காகத்தான் வலைதளத்தில் பதிவு செய்தேன்.

வருக சந்தர் சிங். பெயரே வித்யாசமாய் இருக்கிறதே. அத்துடன் கண்ணதாசன் வேறு.

ஜோதிஜி said...

கும்மியார் இப்போது இருக்கும் உடல் உபாதை சூழ்நிலையில் பதிவுலகத்திற்கு வர வாய்ப்பில்லை. ஆனால் என் ஒவ்வொரு நிகழ்வுகளையும் இங்கு நடக்கும் செய்திகளை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டியவர். ட்விட்டரில் கூட அப்டேட் செய்தார் என்று நினைக்கின்றேன். ஆனால் கல்வெட்டு உங்கள் விமர்சனத்தை அதிகம் எதிர்பார்த்தேன். இந்த பதிவு பலருக்கும செல்லுமா? நீண்டதாக உள்ளதே என்று நினைத்தேன். நான் எதிர்பார்த்த அளவிற்கு போய்ச் சேர்ந்தும் விட்டது.

நீங்க சொன்னது வருத்தமாக இருந்தாலும் உண்மைதான். என்னவொன்று பிரியாணி குவாட்டர் ஏதும் வாங்கிக் கொள்ளாமல் ஒரு வாரம் இதற்காக அலைந்து பெற்ற அனுபவங்கள் ஒரு வருடம் முழுநேர அரசியல்வாதிகள் பெறும் அனுபவம். அதற்கே என் நண்பருக்கு நன்றி சொல்ல வேண்டும்.

யோக்கியவான்கள்.

இங்க யார் தான் யோக்கியவான்கள். தொழிலாளர்கள் முதல் முதலாளிகள் வரைக்கும் அத்தனை வர்க்கத்திலும் நாம் எதிர்பார்க்க முடியாத வியக்கக்கூடிய சங்கதிகள் நிறைய உள்ளது. அப்புறம் என்னைப் போன்றவர்களுக்கு தொலைநோக்கு என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டால் அது வெறும் கேலிக்கூத்து. ஒவ்வொன்றையும் தெரிந்து கொள்ளும் ஆர்வம் அல்லது அக்கறை. அதனால் இந்த ஆட்டத்திற்கு சம்மதம் தெரிவித்தேன். வெறும் எழுத்தாக எழுதும் போது உருவாகும் உணர்வுகள் அதையே களத்தில் காணும்போது உள்ள வித்யாசங்கள். இது தவிர நாம் குறை சொல்ல நிறைய விசயங்கள் உள்ளது. அந்த குறையைப் போக்க அதற்குள் இறங்கும் தைரியம் நமக்கு உள்ளதா? என்ற அகத்தாய்வு என்று எல்லாவிதங்களிலும் நமக்குத் தேவைப்படும் பயிற்சி.

இதற்காகத்தான் இந்த அக்கறை தான் என்னை அழைத்துச் சென்றது.

கடைசி வரியை நீங்களே முடித்து விட்டதால் இந்த கருப்பு எழுத்துகளை உண்மை என்று சொல்வதை தவிர வேறு ஏதும் என்னிடம் இல்லை நண்பா?

செ.சரவணக்குமார் said...

//விதைகள் உறங்குவதில்லை. முளைப்பதற்கான காலங்கள் மட்டும் வேறுபடும்.//

உண்மைதான் நண்பரே. உங்கள் பதிவுகளை தொடர்ந்து வாசிப்பதால் உங்களை நன்கறிவேன். தொடரட்டும் முயற்சிகள். விதைகள் முளைக்கும் காலங்களுக்காக காத்திருப்போம். என்றேனும் முளைத்தே தீருமல்லவா.

கல்வெட்டு said...

.

ஜோதிஜி,
உங்களைக் குறை சொல்லவோ அல்லது வேறு யாரையும் குறை சொல்லவோ நான் பேசவில்லை.

ஒவ்வொரு மனிதனும் சமூகக்கோபம் கொள்கிறான் ஏதாவது ஒரு சூழ்நிலையில்.

அப்படிக் கொள்ளும் அந்தக் கோபம் ஒரு தீப்பொறி போன்றது.

சுற்றி இருக்கும் சூழல் சரியாக இருந்தால்தான் அது பற்றி பெரும்போராட்டத்தீயாக மாற வாய்ப்பு உள்ளது.
(உதாரணம்: எகிப்து போராட்டங்கள்)

அப்படி வைக்கும் தீயை, உள்வாங்கிக்கொள்ளும் சூழல் இல்லாத நிலையில் (தமிழகம் போன்ற் இடம்) முதலில் அப்படி ஒரு பற்றி எரியும் சூழலை உருவாக்க வேண்டும்(சே செய்தது) இல்லை என்றால் எல்லா தீப்பொறிகளும் கடலில் எரியப்பட்ட பந்தங்களாக முடியும். :-(((

அப்படி ஒரு சூழல் தமிழ்நாட்டில் ஏற்பட வாய்ப்பே இல்லை. குறைந்த பட்சம் நமது வாழ்நாளில்.

பல வருட மழையில் நனைந்து பற்றிக் கொள்ளும் சூழலை (சொரணையை) இழந்த வைக்கப்போரில் (தமிழ்நாட்டில்) தீ மூட்ட முடியாது. :-((

அதுபோல முழுநாட்டையும் காயவைக்கவும்(பற்றிக் கொள்ளும் சூழலை ஏற்படுததல்) தனிமனிதனால் முடியாது.

ஆனால் குறைந்த பட்சம் ஒரு கொத்து வைக்கோலை மட்டும் காயவத்து தீ மூட்ட முடியும்.

உதாரணம்:
குத்தம்பாக்கம் இளங்கோ மற்றும் இன்னும் சில பஞ்சாயத்து தலைவர்கள்.
http://www.modelvillageindia.org.in/aboutelango.html

பொது அரசியலில் ஆர்வம் இருந்தால் வார்டு அள‌வில் நீங்கள் முயற்சி செய்யலாம். அப்படி ஒவ்வொரு வார்டிலும் நம்மால நல்ல தலைவர்களை உருவாக்க முடிந்தால் அதுவே நல்ல முயற்சி.

தங்கபாலுவையும் வெசயகாந்தையும் தலைவர் என்று சொல்லி அவர்களுக்கு அடியில் தொண்டராக இருக்கும் மானஸ்தர்களை தவிர்த்து....சுயம் உள்ள லீடர்களை உருவாக்க வேண்டும். தலைவன் என்பவன் லீடர் அல்ல. சே ஒரு லீடர்

..

ஜோதிஜி said...

சரவணக்குமார் உங்கள் பதிவின் கருத்துகள் இன்று தேவியர் இல்லத்தின் தலைப்பு. நன்றி.

ஜோதிஜி said...

கல்வெட்டு உங்க பின்னோட்டத்திற்கு ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிட்டீங்க போலிருக்கு. உங்க விமர்சனம் வந்து விழ ஒருவர் ஆன்லைனில் போட்டுத் தாக்குறாருய்யா என்று கரகோஷம் எழுப்புகிறார்.

அரசியல் ஆர்வம் என்பது என்னிடம் இல்லை. காரணம் இங்க அரசியல் என்பது வேறு தளத்தில் செயல்பட்டுக் கொண்டிருப்பது. அதற்கான எந்த தகுதிகளும் நம்மிடம் இல்லை என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஒரு கூட்டை உடைத்துக் கொண்டு வெளியே வர நினைப்பவர்களுக்கு, அதனால் என்ன பாதிப்புகள் உருவாகும், நாம் எப்படி அதை மனதளவில் ஏற்றுக் கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் மட்டுமே இந்த பதிவாக எழுதினேன்.

நிஜம் வேறு எதார்த்தம் வேறு.

திருப்பூரில் வார்டு கவுன்சிலர்கள் கூட பல கோடிகளுக்கு அதிபதியாகத்தான் இருக்கிறார்கள். வினவு சொன்ன சொன்ன சென்னை வார்டு கவுன்சிலர்களை விட இங்குள்ளவர்கள் கில்லாடியாக இருக்கிறார்கள்.

இன்று சரவணக்குமார் எழுத்தை மேலே தலைப்பு வரிகளாக வைத்துள்ளேன். அதுவே என் வாழ்க்கையின் போக்கும் மற்றும் எல்லாமே?

இந்த நிமிடம் வரைக்கும் திட்டமிடுதல் எதுவுமில்லை. ஆனால் எதற்கும் தயாராகும் மனோநிலையில் இருப்பதால் நிச்சயம் நம் நாட்டில் ஏதோவொருவகையில் மாற்றம் உண்டு நம்பிக்கை கொண்டு வாழும் பல லட்ச மக்களில் நானும் ஒருவன்.

தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்தால் மட்டுமே நீங்க சொன்ன வைக்கோல் போர் காயாது. இங்கு தான் மழையும் வெயிலும் தொடர்ந்து வந்து கொண்டே தானே இருக்கிறது.

வாய்ப்புகள் அதிகம். இப்போது நடக்கப்போகும் தேர்தல் ஒரு மாறுதலை உருவாக்கும். பார்த்துக் கொண்டேயிருங்க.

கல்வெட்டு said...

.


//ஜோதிஜி said...

ஒரு கூட்டை உடைத்துக் கொண்டு வெளியே வர நினைப்பவர்களுக்கு, அதனால் என்ன பாதிப்புகள் உருவாகும், நாம் எப்படி அதை மனதளவில் ஏற்றுக் கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் மட்டுமே இந்த பதிவாக எழுதினேன்.//


..

ஜோதிஜி
நிச்சயம் அதை புரிந்துகொண்டேன்
பகிர்ந்தமைக்கு நன்றி

**

நாய்க்கு வாக்கப்பட்டால் குரைத்துத்தான் பேசமுடியும்.(அல்லது "வெசயகாந்துக்கு வேட்பாளரானால் அடி வாங்கத்தான் வேண்டும்)
நீங்கள் வாக்கப்பட்ட இடம் சரியில்லை என்பதே நான் சொல்ல வந்த கருத்து. :-))

.

Jerry Eshananda said...

விவரமான செய்தி த்தொகுப்பு...எல்லாமே அரசியல் தான்.

தாராபுரத்தான் said...

நாட்டு நிலைமை இப்படி இருக்கு...

Seiko said...

/அவர் குழுவில் இருந்த மற்ற சாயப்பட்டறை உயர்பதவி மக்களும் சில முதலாளிகளும் என்னைப் பார்த்து 'சாயப்பட்டறை குறித்து வெறுமனே எழுதினால் மட்டும் போதாது?' என்றனர்? /
இவர்களை மறுபடி சந்தித்தீர்களா?
/காதுகளில் ரத்தம் வழியும் அளவிற்கு பேசிய செந்தமிழ் வார்த்தைகளும், நிறைய உண்டு/ தானே?.

சி.பி.செந்தில்குமார் said...

இந்தியா வல்லரசோ இல்லையோ தமிழக அரசு இப்போது வல்லரசாக உள்ளது.. எனவே வேறு நல்லரசு அமைவது கஷ்டம் தான்

ஜோதிஜி said...

செந்தில் தொடக்கத்தில்நீங்க சொல்வது போலத்தான் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் நிறைய மாறுதல்கள் உருவாகும் போலிருக்கு.

வாங்க தாரபுரத்தான் அய்யா. இன்னமும் இருக்கய்யா.

வருக ஜெரி. அரசியலே நீங்க சொல்வது போல தீ தான்.

கல்வெட்டு விஜயகாந்த் அடித்தது மைக் கர்புர் என்று கத்த உள்ளே இருந்த அந்த தொழில் நுட்பத்தை பார்த்துக் கொண்டிருந்தவரை. அது போல அதிமுக கொடியை ஆட்டிக் கொண்டு விஜயகாந்தை பேசவிடாமல் கூட்டத்தின் கவனத்தை திசை திருப்பிக் கொண்டிருந்தவரை கொடியை இறக்குப்பா என்று தான் சொல்லியிருக்கிறார்.

ஆனால் நான் மேலே சொன்னபடி மீடியா ஊதிப் பெருக்கி பெருமாளாக மாற்றிவிட்டது. ஒரு வகையில் விஜயகாந்த் விரும்பும் முக்கியத்துவத்தை இவர்களே கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஜெ வை ஆதிரிக்க விரும்பும் வட இந்திய ஊடகங்களும் இப்போது விஜயகாந்தின் தேவையில்லாத பல விசயங்களை பின்னுக்கு தள்ளி இவரை முன்னுக்கு கொண்டு வர போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஜோதிஜி said...

சீகோ

இது குறித்து நிறைய எழுத முடியும்.

மூன்று நாளில் சாயப்பட்டறை முதலாளி பேசிய பேச்சும் நடந்து கொண்ட விசயங்களும் எனக்கு ஆச்சரியம் அளித்தது. வேண்டும் அளவிற்கு சேர்த்து விட்டார்கள். படிப்பறிவு இல்லாமல் அதிக உழைப்பு இல்லாமல் உழைப்பவர்களை வைத்து சட்டத்திற்கு புறம்பாக நடந்து அத்தனையும் சேர்த்து விட்டார்கள். இவரை போன்றவர்களுக்கு இன்னும் பத்து வருடங்கள் சாயப்பட்டறைகள் திறக்காமல் இருந்தால் கூட ஒன்றும் குடி முழுகிவிடாது. பாவம் உழைப்பாளிகள். வேறு என்ன வேலையை எங்கோ போய் தேட வேண்டுமோ?

ஏகப்பட்ட இளைஞர்கள் அழைத்தவர்களை வாபஸ் வாங்கு என்ற சொன்னவர்களை உண்டு இல்லை என்று ஆக்கிவிட்டார்கள். பெண்கள் இவர்களுக்கு தொலைபேசி வழியாக அழைக்க மறுத்து விட்டார்கள்.
இதுவெல்லாம் மீடியாவுக்கு முக்கியமா?

இராஜராஜேஸ்வரி said...

விதைகள் உறங்குவதில்லை. முளைப்பதற்கான காலங்கள் மட்டும் வேறுபடும்.

Eternal True.

கிரி said...

//ஜோதிஜி said...
வேறு வழியில்லை சித்ரா. சிறிது இடைவெளி விட வேண்டிய நேரம். நேரம் இருக்கும் போது விரும்புவர்கள் வாசிக்கட்டும்//

:-)

ஜோதிஜி செமையா எழுதி இருக்கீங்க என்று கூறினால் டெம்ப்ளேட் பின்னூட்டம் ஆகி விடும்.. கல்வெட்டு கூறியதிலும் ஒரு சில கருத்துகளில் எனக்கு உடன்பாடுண்டு. ரொம்ப சலிப்பாகத்தான் இருக்கிறது.. இப்போதெல்லாம் இது பற்றி பேசவே வெறுப்பாக இருக்கிறது. சும்மா ஒன்றையே அர்த்தமில்லாமல்!! கூறிக்கொண்டு இருக்கிறோமோ என்று தோன்றுகிறது அல்லது யாருமே முக்கியத்துவம் தராத இடத்தில் நாம் வெட்டியாக முழங்கி கொண்டு இருக்கிறோமோ என்று இருக்கிறது.

நம்முடைய சிஸ்டமே மாறனும்.. இப்படி நான் கூறுவதை நினைத்து எனக்கே காமெடியாக இருக்கிறது. வேறு எதுவும் கூற தோன்றவில்லை. இந்த உலகத்தோடு ஒன்றி வாழ பழகிக்கொண்டேன்..கூடுமானவரை என்னளவில் நேர்மையாக.

உங்களுக்கு நினைவு இருக்கிறதா என்று தெரியவில்லை. நீங்கள் துவக்கத்தில் (பதிவுலகம் வந்த புதிதில்) இருந்தே பெரிது பெரிதாக எழுதுவீர்கள். நான் கூட கொஞ்சம் சிறிய பதிவாக எழுங்கள் அதிகம் பேர் படிப்பார்கள் என்று கூறி இருந்தேன்..நீங்களும் இது பற்றி எதோ கூறி இருந்தீர்கள் நினைவில்லை. தற்போது நீங்கள் அதிக வாசகர்களை இதே பெரிய :-) எழுத்து மூலம் பெற்று இருப்பது எனக்கு அவ்வப்போது ஆச்சர்யத்தை தரும். திறமை என்றும் தாமதமானாலும் கவனிக்கப்படும் என்பதற்கு நீங்களும் ஒரு உதாரணம்.

Anonymous said...

நல்ல பதிவு....அனுபவங்கள் திகிலாக தினசரி பல்லாயிரம்பேர் அனுபவைக்கின்றனர்...அவற்றை தொகுத்தால் உண்மைகள் உலகறியும்....பல தகவல்கள் மறைக்கப்படுகின்றன...உங்கள் பார்வையும் கண்ணொட்டமும் அருமை