Monday, August 05, 2013

வாழ்க்கை தந்த பஞ்சு

குறைந்தபட்சம் ஐந்தாண்டுகளுக்குள் ஏராளமான மாற்றம் இங்கே உருவாகிக் கொண்டே இருக்கின்றது.  பயன்படுத்திய எந்திரங்கள், உடனிருந்த மனிதர்கள், பணிபுரிந்த நிறுவனங்கள், மாறிய தொழில் நுட்பங்கள் என்று ஒவ்வொன்றும் படிப்படியாக மாறி காலவெள்ளத்தில் கரைந்து போயிருக்கும். புதிதாக சில உருவாகியிருக்கும். தப்பி பிழைத்தவர்களே வாழத் தகுந்தவர்கள். 

இந்த வலைபதிவில் திருப்பூர் குறித்து அதிகமாக எழுத அதுவே டாலர் நகரம் என்ற புத்தகமாக மாறியது. எழுதாத விசயங்கள் அதிகமாக இருந்தாலும் ஆய்த்த ஆடைகள் மற்றும் இதன் ஏற்றுமதி துறை சார்ந்த ஒவ்வொரு விசயத்தையும் பல பதிவுகளில் எழுதியுள்ளேன்.

இருபது வருடங்களாக இந்த துறையில் இருந்தாலும் இதில் உள்ள ஒவ்வொரு துறையிலும் நாம் இருந்துள்ளோம் என்பதை ஆவணப்படுத்தும் பொருட்டு எடுத்த புகைப்படங்கள்.  தொழிலும் வாழ்வும் 
நான் பிறந்த இராமநாதபுரம் மாவட்டம் சிவகங்கை மாவட்டமாக மாறிய போது கொஞ்சூண்டு வளர்ச்சி கண்டது. விரல் விட்டு எண்ணும் அளவிற்கு புதுக்கோட்டை செல்லும் வழியில்,திருப்பத்தூர் செல்லும் வழியில் குறிப்பிடத்தக்க பஞ்சாலைகள் இருந்தன. அதனை பஞ்சுமில் என்றே அழைத்தனர். ஆனால் திருப்பூர் வந்து ஆடைத்துறையில் உள்ள ஒவ்வொரு பிரிவையும் பார்த்த போது இருந்த சூழ்நிலையை இப்போதுள்ள வளர்ச்சி பெற்றுள்ள சூழ்நிலையை ஒப்பிடும் போது தலைகீழ் மாற்றங்கள்.

சின்ன நூல் கண்டா நம்மை சிறைபடுத்தும்?

நவீன எந்திரங்கள் ஏராளமான மாற்றங்களை இங்கே உருவாக்கி உள்ளது. தொடக்கத்தில் கோவையில் லஷ்மி மில் பஞ்சாலைக்குத் தேவைப்படும் எந்திரங்களை தயார் செய்து கொடுத்துக் கொண்டிருந்தது. இது தவிர விலை குறைந்த எந்திரங்களை லூதியானா தந்து கொண்டிருந்தது.

வருடக்கணக்கில் காத்திருந்த சூழ்நிலை மாறி கையில் பணம் இருந்தால் உலகில் எந்த மூலையில் உள்ள நவீன எந்திரங்களையும் இங்கே கொண்டு வந்து விடலாம் என்கிற அளவுக்கு மாறியுள்ளது.

புதிய தலைமுறையில் ஆயுதம் செய்வோம் என்ற பகுதியில் வந்த பஞ்சாலை தொழிற்சாலையின் ஒரு பகுதியும், சுயசார்புத்தன்மையை நாம் வளர்க்காமல் வளர்ந்து கொண்டிருப்பதன் மற்றொரு கோணத்தையும் இந்த காணொளி காட்டுகின்றது. 

 


ஒரு ஆய்த்த ஆடை தொழிற்சாலை எவ்வாறு இயங்குகின்றது என்பதை காட்டும் பதிவுகள்

9 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

ஆமாம்.... தொழிற்துறை விரைவாக முன்னேற்றம் அடைந்து வருகிறது...

ஆனால் தொழிலாளர்கள் நலிவடைந்து வருகிறார்கள்...

ரவி சேவியர் said...

\\தொழிற்துறை விரைவாக முன்னேற்றம் அடைந்து வருகிறது...
ஆனால் தொழிலாளர்கள் நலிவடைந்து வருகிறார்கள்//

முதலாளிகளுக்கு லாபம் பருக்கல் விகிதத்தில், தொழிலாளர்களுக்கு சம்பளம் கூட்டல் விகிதத்தில் அதுதான் காரணம்...இளங்கலை பொருளாதார்ஹ்த்தில் படித்தது.

ரவி சேவியர் said...

\\தொழிற்துறை விரைவாக முன்னேற்றம் அடைந்து வருகிறது...
ஆனால் தொழிலாளர்கள் நலிவடைந்து வருகிறார்கள்//

முதலாளிகளுக்கு லாபம் பெருக்கல் விகிதத்தில், தொழிலாளர்களுக்கு சம்பளம் கூட்டல் விகிதத்தில் அதுதான் காரணம்...இளங்கலை பொருளாதாரத்தில் படித்தது.

தி.தமிழ் இளங்கோ said...

FACEBOOK இல் உங்கள் பணிக்கால புகைப்படங்களைப் பார்த்தேன். இவ்வளவுக்கும் இடையில் உங்கள் எழுத்துப் பணி வியக்க வைக்கிறது.
ஏற்கனவே படித்த பதிவுகளுக்கு இணைப்பு தந்துள்ளீர்கள். நேரம் கிடைக்கும்போது மீண்டும் படிக்கிறேன். நன்றி!

'பரிவை' சே.குமார் said...

அண்ணா...
தொழிற்துறையில் வளர்ச்சி தொழிலாளர்களின் வாழ்வில் இல்லை என்பது வேதனைதானே...

முகப்புத்தகத்தில் உங்கள் புகைப்படங்கள் பார்த்தேன் அண்ணா... இத்தனை பணிகளுக்கும் இடையில் சிறப்பான வலைத்தளத்தை வழி நடத்துவது பெரிய விஷயந்தான்... வாழ்த்துக்கள் அண்ணா...

ஜோதிஜி said...

பல சமயங்களில் பலரும் கேட்கும் கேள்வி. எந்த துறையில் இருந்தாலும் ஆர்வமும், நேர திட்டமிடுதலும் இருந்தால் நிச்சயம் கலைகளில் ஆர்வம் செலுத்த நம்மால் முடியும். என்னால் முடிந்தது இந்த எழுத்துக் கலை. மன அமைதிக்கு அருமருந்து எழுத்தே..

ஜோதிஜி said...

மனமிருந்தால் மார்க்கபந்து.

ஜோதிஜி said...

திருப்பூர் குறித்து விரைவில் எழுதுகின்றேன்.

ஜோதிஜி said...

விதிவிலக்கு திருப்பூர்.